உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மரபிசை பயின்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

மரபிசை பயின்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சங்கர மடத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசியுடன், காஞ்சிபுரம் சங்கர மடத்தில் முப்பெரும் விழா நேற்று நடந்தது.திருவிளையாடற்புராண தொடர் சொற்பொழிவு துவக்க விழா, மரபிசை பயின்று நிறைவு செய்த மாணவ - மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் விழா, சைவ சித்தாந்த பட்டய வகுப்புகள் துவக்க விழா என நடைபெற்ற முப்பெரும் விழாவிற்கு, சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் தலைமை தாங்கினார்.சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். முனைவர் அருணை பாலறாவாயன் சிறப்புரையாற்றினார். தமிழ்த்துறை தலைவர் முனைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.இதில், கடந்த ஆண்டு சங்கரா கல்லுாரியில் தேவாரம், திருவாசகம், திருப்புகழ், பஜனை பாடல்கள் உள்ளிட்ட பக்தி பாடல்கள் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற 80 மாணவ - மாணவியருக்கு பட்டய சான்று வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை