துறைமுகங்களுக்கான செஸ் சென்னை அணி முதலிடம்
சென்னை, துறைமுக விளையாட்டு கட்டுபாட்டு வாரியம், சென்னை, எண்ணுார் காமராஜ் துறைமுகம் ஆகியவை, இணைந்து, முக்கிய துறைமுக அணிகள் இடையேயான செஸ், டேபிள் டென்னிஸ் தொடர் போட்டிகளை, சென்னை நேரு விளையாட்டரங்கில் நடத்தின. கடந்த 26ம் தேதி துவங்கிய போட்டிகள், நேற்று நிறைவடைந்தன.இதில் சென்னை, கோல்கட்டா உட்பட எட்டு துறைமுகத்தை சார்ந்த, 60 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். செஸ் போட்டியில், சென்னை, கோவா, மும்பை தீனதயாள் துறைமுக அணிகள், முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தன.செஸ் ஆண்கள் தனிநபர் பிரிவில், சென்னை துறைமுகத்தை சேர்ந்த இளங்கோ; காமராஜ் துறைமுகத்தை சேர்ந்த ஹரிகரன்; சென்னை துறைமுகத்தை சேர்ந்த லட்சுமி நரசிம்மன்.பெண்கள் பிரிவில், சென்னை துறைமுகத்தை சேர்ந்த சுஜாதா, கற்பகசெல்வி, மும்பை துறைமுகத்தை சேர்ந்த வர்ஷா பட்டன்கர் ஆகியோர், முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். 'ஓவர் ஆல் சாம்பியன்' பட்டத்தை சென்னை வென்றது.டேபிள் டென்னிஸ் போட்டி 45, 50 வயதிற்கு மேற்பட்டோர், பொதுப்பிரிவு என மூன்று பிரிவாக நடத்தப்பட்டது.அதில், 45 வயதிற்கு மேற்பட்டோர் ஒற்றையர் பரிவில் கோல்கட்டா, மும்பை, தீன்தயாள் துறைமுகங்கள்; 45 வயதிற்கு மேற்பட்டோர் இரட்டையர் பிரிவில் கோல்கட்டா, மும்பை, சென்னை அணிகள் முதல் மூன்று இடங்களை பிடித்தன.பொதுப்பிரிவு ஒற்றையர் பிரிவில், கோல்கட்டா, விசாகப்பட்டினம், தீன்தயாள்; இரட்டையர் பிரிவில் கோல்கட்டா, விசாகப்பட்டினம், மும்பை அணிகள் முறையே, முதல் மூன்று இடங்களைப் பிடித்தன.மேலும், 50 வயதிற்கு மேற்பட்டோர் ஒற்றையர் பிரிவில், விசாகப்பட்டினம், மும்பை, சென்னை துறைமுகம்; 50 வயதிற்கு மேற்பட்டோர் இரட்டையர் பிரிவில், மும்பை, சென்னை, விசாகப்பட்டினம் துறைமுக அணிகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்தன.டேபிள் டென்னிஸ், 'ஓவர் ஆல் சாம்பியன்' பட்டத்தை கோல்கட்டா அணி கைப்பற்றியது.