சரிந்து விழுந்த தடுப்பு நெ.சா.துறை பாராமுகம்
மதுரமங்கலம : மதுரமங்கலம் அடுத்த காந்துார் கிராமத்தில் இருந்து, சுங்குவார்சத்திரம் செல்லும் சாலை உள்ளது. இச்சாலை வழியாக பள்ளூர், கொட்டவாக்கம், பரந்துார், ஏகனாபுரம், மதுரமங்கலம் உள்ளிட்ட கிராமத்தினர், காந்துார் வழியாக சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார் சென்று வருகின்றனர்.இந்த சாலை வளைவில், வாகனங்கள் நிலைதடுமாறி கவிழாமல் இருப்பதற்கு, கடந்தாண்டு நெடுஞ்சாலை துறை சார்பில் இரும்பிலான தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டன.தற்போது, சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்ட தடுப்பு கம்பிகள் சரிந்து விழுந்துள்ளன. இதனால், இச்சாலை வழியாக செல்வோர், வளைவில் நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது. எனவே, சாலையோரம் அமைக்கப்பட்ட தடுப்பு கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.