உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலை வளைவில் கால்வாய் தளம் சேதம்

சாலை வளைவில் கால்வாய் தளம் சேதம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, மாமல்லன் நகரில் இருந்து மின்நகருக்குள் செல்லும் பிரதான சாலையான விவேகானந்தர் தெருவில், மழைநீர் மற்றும் கழிவுநீர் வெளியேறும் வகையில் சாலையோரம் கான்கிரீட் தளத்துடன் வடிகால்வாய் கட்டப்பட்டுள்ளது.சாலை வளைவு பகுதியில் இக்கால்வாய் மீது சென்ற கனரக வாகனம் மோதியதில், கான்கிரீட் தளத்தின் ஒரு பகுதி சேதமடைந்து உடைந்த நிலையில் உள்ளது.சாலையின் தரை மட்டத்தில் கால்வாய் திறந்து இருப்பதால், இரவு நேரத்தில் அவ்வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் மட்டுமின்றி இருசக்கர வாகன ஓட்டிகளும் கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது.எனவே, சேதமடைந்த கால்வாய் மீது சிமென்ட் சிலாப் போட்டு மூட, கோனரிகுப்பம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ