ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம்:அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள ஓய்வூதியதாரர்களுக்கு, 2015 நவ., முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்க, அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, ஏற்கனவே பலகட்ட போராட்டங்களை இச்சங்கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், காஞ்சிபுரம் காவலான்கேட் பகுதியில், சங்கத்தின் மண்டல செயலர் சிவஞானம் தலைமையில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில கவுரவ தலைவர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். அகவிலைப்படியை உயர்த்தி வழங்க, ஓய்வூதியதாரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.