உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / டிவிஷன் கிரிக்கெட் லீக் சிங்கம் புலி த்ரில் வெற்றி..

டிவிஷன் கிரிக்கெட் லீக் சிங்கம் புலி த்ரில் வெற்றி..

சென்னை: டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டிகள், சென்னையின் பல்வேறு மைதானங்களில் நடக்கின்றன.இதில், நான்காவது 'பி' டிவிஷன் போட்டியில், சிங்கம் புலி சி.சி., அணி, 41.1 ஓவர்களில், 164 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. எளிதான இலக்கை நோக்கி அடுத்து விளையாடிய, பாரதி சி.சி., அணிக்கு, சிங்கம் புலி அணி பந்து வீச்சாளர் ஜெபசெல்வின் சிம்ம சொப்பனமாக விளங்கினார்.முடிவில், 35.2 ஓவர்களில் 148 ரன்களுக்கு பாரதி சி.சி., அணி ஆட்டமிழந்தது; ஜெபசெல்வின் ஆறு விக்கெட் சாய்த்தார்.மற்றொரு போட்டியில், ஜூபிலி சி.சி., அணி, 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து, 301 ரன்கள் அடித்தது. அணியின் வீரர் வினித், 120 பந்துளில் ஒரு சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் அடித்தார்.எதிர் அணியின் வீரர் சூர்யபிரகாஷ், ஐந்து விக்கெட் சாய்த்தார். கடினமான இலக்கை நோக்கி விளையாடிய 'ட்வன்டீந்த் சென்சுரி' அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.இதனால் வெற்றி தோல்வி, மதில்மேல் பூனை என்பது போல ஒருகட்டத்தில் இருந்தது. முடிவில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் மட்டுமே எடுத்து, 13 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை