நாளை மின் குறைதீர் கூட்டம்: காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஒரு கோட்டத்தில், மின் நுகர்வோர்கூட்டம் நடந்துவருகிறது.இந்த மாதத்தின் நான்காவது வியாழக்கிழமை, காஞ்சிபுரம் தெற்கு கோட்டமின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை நடைபெற உள்ளது.காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை காலை 11:00 மணிக்கு நடை பெறும் கூட்டத்தில், மின் நுகர்வோர்தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என, காஞ்சி புரம் மின் பகிர்மான வட்டார நிர்வாகம் தெரிவித்துள்ளது.