சாலை தடுப்பு சேதம் சீரமைக்க எதிர்பார்ப்பு
சிங்காடிவாக்கம்:வாலாஜாபாத் ஒன்றியம் சிங்காடிவாக்கம் ஊராட்சியில் உள்ள பிரதான சாலையில், உயர்மட்ட பாலம் அமைந்துள்ள சாலையோரம் பள்ளம் உள்ள இடத்தில், வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்தில் சிக்குவதை தவிர்க்க, இரும்பு தகடுகளால் செய்யப்பட்ட தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.இவ்வழியாக சென்ற கனரக வாகனம் மோதியதில், சாலை தடுப்பு சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது. மின்விளக்கு வசதி இல்லாத இச்சாலையில் செல்லும் வாகனங்கள், கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போது, சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த சாலை தடுப்பை சீரமைக்க, நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.