உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நிறுத்தங்களில் நிற்காத அரசு பேருந்துகள்

நிறுத்தங்களில் நிற்காத அரசு பேருந்துகள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம், திருத்தணி வழியாக, திருப்பதிக்கு அரசு விரைவு மற்றும் சாதாரண பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இந்த பேருந்துகளின் வாயிலாக வெள்ளைகேட், கம்மவார்பாளையம், பள்ளூர், சேந்தமங்கலம், தக்கோலம் கூட்டுசாலை, தக்கோலம் ரயில் நிலையம், தணிகைபோளூர், மத்துார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சுற்றியுள்ள நுாற்றுக்கணக்கான கிராம மக்கள் தங்களின் தேவைக்கு காஞ்சிபுரம், திருப்பதி, அரக்கோணம், திருத்தணிக்கு சென்று வருகின்றனர்.இதில், காஞ்சிபுரத்தில் இருந்து, திருப்பதிக்கு செல்லும் அரசு பேருந்துகள் கம்மவார்பாளையம், தக்கோலம் ரயில் நிலையம், தணிகைபோளூர் உள்ளிட்ட பல்வேறு பேருந்து நிறுத்தங்களில் நின்று செல்வதில்லை. அதேபோல், திருப்பதியில் இருந்து காஞ்சிபுரம் மார்கமாக செல்லும் பேருந்துகள் தக்கோலம் கூட்டு சாலை, கம்மவார்பாளையம் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்வதில்லை என, பயணியர் இடையே புலம்பல் எழுந்துள்ளது. எனவே, இரு மார்கங்களில் செல்லும் அரசு பேருந்துகள் அறிவிக்கப்பட்ட நிறுத்தத்ங்களில் நின்று செல்ல வேண்டும் என, பயணிரிடையே கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை