உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையோரம் மண் அணைக்கும் பணி தீவிரம்

சாலையோரம் மண் அணைக்கும் பணி தீவிரம்

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட வட்டம்பாக்கம் ஊராட்சி.இப்பகுதிவாசிகளின் பிரதான சாலையாக உள்ள வட்டம்பாக்கம், பனப்பாக்கம் சாலை வழியே, வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை உள்ளது.தினமும் பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்கு செல்வோர், இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக இச்சாலை சேதமடைந்து இருந்தது.இதையடுத்து, 2 கோடி ரூபாய் மதிப்பில், கடந்த ஆக., மாதம் சாலை செப்பனிடப்பட்டது. இருப்பினும் சாலையோரம் மண் அணைக்கவில்லை.இதனால், மண் அரிப்பு ஏற்பட்டு சாலையோரங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் விபத்தில் சிக்கி வந்தனர்.குறிப்பாக, இரவு நேரங்களில் எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, சாலையோர பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வந்தனர். இதையடுத்து, சாலையோரம் உள்ள பள்ளத்தில் மண் அணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை