மேலும் செய்திகள்
'செல்வமகள்' சேமிப்பு திட்டத்திற்கு சிறப்பு மேளா
21-Feb-2025
காஞ்சிபுரம்:அஞ்சல் துறையில், பெண் குழந்தைகள் நலனுக்காக, ‛செல்வ மகள்' சேமிப்பு திட்டதை. 2015ம் ஆண்டு, மத்திய அரசு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின்கீழ் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பெற்றோர், பாதுகாவலர்கள் கணக்கு துவக்கலாம்.குறைந்தபட்சம், 250 ரூபாய் முதல் 1.50 லட்சம் ரூபாய் செலுத்தி கணக்கு துவக்கலாம். இதற்கு, 8.2 சதவீத வட்டி கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் செயல்படும் வைப்பு தொகை வருமான வரி சட்டத்தின் பிரிவு ‛80-சி'யின் கீழ் ஒரு நிதி ஆண்டிற்கு 1.50 லட்ச ரூபாய் வரையில் வரிச்சலுகை வழங்கப்படுகிறது.கணக்கு துவக்கி 21 ஆண்டுகள் முடிவில், முதிர்ச்சி தொகை கிடைக்கும். அதற்கு முன் உயர் கல்விக்காக, 10ம் வகுப்பு முடிந்து அல்லது 18 வயது வயது கடந்தால், 50 சதவீதம் தொகை எடுத்துக் கொள்ளலாம்.காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டம், காஞ்சிபுரம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதுார், திருத்தணி உள்ளிட்ட தபால் அலுவலகங்களில் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட உள்ளன.இங்கு, பிப்., 21, 28 மற்றும் மார்ச் 10 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், செல்வ மகள் சேமிப்பு கணக்கு துவக்கி பயன் பெறலாம் என, காஞ்சிபுரம் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் தெரிவித்து இருந்தார்.அதன்படி, மேற்கண்ட மூன்று நாட்கள் நடந்த சிறப்பு முகாமில், 2,601 புதிய செல்வ மகள் சேமிப்பு கணக்கு துவக்கி, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டம் முதல் இடம் பிடித்துள்ளது.
21-Feb-2025