உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வீடு வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது

வீடு வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது

சென்னை, சென்னை, சேத்துப்பட்டு, ஜெகநாதபுரத்தைச் சேர்ந்தவர் தேவிகா, 40. இவர், அருகில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் வசித்தபோது, கொளத்துார் லட்சுமிபுரம், அண்ணா தெருவைச் சேர்ந்த வினோத்குமார், 32, என்பவர் அறிமுகமாகி உள்ளார்.இவர் தேவிகாவிடம், 'நெருங்கிய நண்பர் ஒருவர் சென்னை மாநகராட்சியில் செயற்பொறியாளராக பணிபுரிகிறார்' என்றும், அவர் வாயிலாக, குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாகவும் ஆசைகாட்டி உள்ளார்.இதை நம்பிய தேவிகா, கடந்த 2023ல் இரண்டு தவணைகளாக, 2.20 லட்சம் ரூபாயை வினோத்குமாரிடம் வழங்கி உள்ளார். ஆனால், வீடும் கிடைக்கவில்லை; கொடுத்த பணமும் திரும்ப கிடைக்கவில்லை. ஏமாற்றப்பட்டதை அறிந்த தேவிகா, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான போலீசார் விசாரித்து, வினோத்குமாரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !