உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாங்காடு - மவுலிவாக்கம் சாலை வடிகால் பணி அரைகுறை

மாங்காடு - மவுலிவாக்கம் சாலை வடிகால் பணி அரைகுறை

குன்றத்துார்:மாங்காடு- - மவுலிவாக்கம் சாலை 4 கி.மீ., துாரம் கொண்டது. இந்த சாலை போரூர்- - குன்றத்துார் சாலை, குன்றத்துார் - -பூந்தமல்லி சாலையை இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது.மாங்காடு- - மவுலிவாக்கம் சாலையில் மழைநீர் வடிகால் இல்லாததால், பருவமழை காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த சாலையில் மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்தது.இதையடுத்து 13 கோடி ரூபாய் மதிப்பில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கால்வாய் அமையும் பகுதியில் 15க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் இடையூறாக உள்ளன. இதனால், வடிகால் பணி அரைகுறையாக விடப்பட்டுள்ளது.பருவமழை துவங்கும் முன் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், 'கால்வாய் அமைகிற இடத்தில் உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க மின் வாரியத்திற்கு அதற்கான கட்டணம் செலுத்தியுள்ளோம். தற்போது, 60 சதவீதம் கால்வாய் கட்டுமான பணிகள் நிறைவுற்றுள்ளன. பருவமழைக்கு முன் எஞ்சியுள்ள பணிகள் முடிக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை