பழையசீவரம் மலை கோவிலில் மாசி மக விழா விமரிசை
பழையசீவரம்:வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் கிராமத்தில், பத்மகிரி என்கிற மலையில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில், 6ம் ஆண்டு மாசி மக விழா நேற்று நடந்தது.விழாவையொட்டி, காலையில் லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதை தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு, திருமஞ்சனம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி, கேடயத்தில் அமர்ந்து அப்பகுதி தெருக்களில் ஊர்வலமாக வந்தார்.அப்போது, வீடுகள் தோறும் பக்தர்கள் தேங்காய் உடைத்துத் தீபம் ஏற்றி வழிபட்டனர்.