உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 40 பேருக்கு பட்டா விபரங்களில் குளறுபடி: 4 ஆண்டுகளாக நடவடிக்கை இல்லை

40 பேருக்கு பட்டா விபரங்களில் குளறுபடி: 4 ஆண்டுகளாக நடவடிக்கை இல்லை

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அருகே, நத்தப்பேட்டை பகுதி, 15 ஆண்டுகளுக்கு முன் கிராம ஊராட்சியாக இருந்தது. அப்போது, கிராம பஞ்சாயத்து தெருவில் வசிக்கும் குடும்பங்களுக்கு, பட்டா வழங்க மாவட்ட நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அங்கு வசிக்கும், 40 பேருக்கு, 2008ம் ஆண்டில், சர்வே எண், 237ல், பட்டா வழங்கப்பட்டது. பட்டா வழங்கி, 13 ஆண்டுகளுக்கு பின், 2021ல், மாவட்ட நிர்வாகம் வழங்கிய பட்டாவில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது, பயனாளிகளுக்கு தெரியவந்துள்ளதுபட்டா நீளம், அகலம், பயனாளியின் பெயர், உட்பிரிவு எண் போன்றவை தவறாக உள்ளது மட்டுமல்லாமல், வீடு அமைந்துள்ள இடத்திற்கு பதிலாக அருகில் உள்ள காலி இடத்திற்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஆன்லைனிலும் பட்டா விபரங்கள் தவறாகவே பயனாளிகளுக்கு கிடைக்கிறது.பட்டா விபரங்களை திருத்தி வழங்க, நான்கு ஆண்டுகளாக, நத்தப்பேட்டை பகுதிவாசிகள், கலெக்டரிடமும், ஜமாபந்தி முகாம்களிலும், அமைச்சரிடம் இரு முறையும், முதல்வர் தனிப்பிரிவிடம் இருமுறையும் மனு அளித்து வருகின்றனர்.இதுவரை பட்டாவில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவில்லை என, நான்கு ஆண்டுகளாக மனு அளிக்கும் தனசேகரன் என்பவர் புகார் தெரிவிக்கிறார். தவறாக பதிவான பட்டா விபரங்களை சரி செய்து, பயனாளிகளுக்கு சரியான பட்டாக்களை வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை