உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஸ்ரீபெரும்புதுாரில் மிதமான மழை வெப்பத்தின் தாக்கம் குறைந்தது

ஸ்ரீபெரும்புதுாரில் மிதமான மழை வெப்பத்தின் தாக்கம் குறைந்தது

ஸ்ரீபெரும்புதுார்:தமிழகத்தில் நடப்பாண்டில் குளிர்காலம் முடிந்து, கோடைக் காலம் இன்னும் முறையாக துவங்கவில்லை. இருப்பினும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளது.இந்த நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று, தென் மாவட்டங்களில் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்களில் கன மழையும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டதுடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், ஒரகடம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று, காலை 8:30 மணியில் இருந்து, ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது.தொடர்ந்து, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கோடை காலம் துவங்காத நிலையில், பிப்., மாதம் முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று காலை பெய்த மிதமான மழையால், வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !