உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தேசிய ஸ்கேட்டிங் போட்டி காஞ்சி சிறுவன் அசத்தல்

தேசிய ஸ்கேட்டிங் போட்டி காஞ்சி சிறுவன் அசத்தல்

காஞ்சிபுரம்:தேசிய அளவிலான 'ஸ்பீடு ஸ்கேட்டிங்' சாம்பியன்ஷிப், கடந்த 31 முதல் பிப்., 2ம் தேதி வரை மதுரையில் நடந்தது. இதில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 15 மாநிலங்களைச் சேர்ந்த 1,200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். 4 - 16 வயது வரை உள்ளிட்டோருக்கு, பல்வேறு பிரிவாக தனித்தனி போட்டி நடந்தது.இதில், காஞ்சிபுரம் ‛ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ்' அகாடமியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், தலைமை பயிற்சியாளர் பாபு தலைமையில் பங்கேற்றனர். இதில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சசி- பிரியதர்ஷினி தம்பதியின் மகன் ஆத்விக், ஐந்து வயதுக்கு உட்பட்டோர் ஸ்பீட் ஸ்கேட்டிங் பிரிவில் பங்கேற்றார்.இப்போட்டியில் பங்கேற்க பயிற்சி பெற்றபோது, திடீரென வலது கையில் லேசான முறிவு ஏற்பட்டது. இருந்த போதிலும், போட்டியில் பங்கேற்று ஒவ்வொரு சுற்றாக முன்னேறி இறுதி சுற்றில் பங்கேற்றார்.இதை தொடர்ந்து, தேசிய அளவில் வெண்கல பதக்கம் வென்று காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்த்தார். இதன் வாயிலாக, ஜூன் மாதம் இறுதியில் இந்தோனேஷியாவில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்க ஆத்விக் தகுதி பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை