உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோயம்பேடு அங்காடியில் குப்பை அகற்ற புதிய நிறுவனம்

கோயம்பேடு அங்காடியில் குப்பை அகற்ற புதிய நிறுவனம்

சென்னை : கோயம்பேடு காய், கனி, மலர் மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில், திட கழிவுகளை சேகரித்து அப்புறப்படுத்த, தனியார் நிறுவனத்தை தேர்வு செய்யும் பணிகள் துவங்கியுள்ளன.சென்னை கோயம்பேடில் காய், கனி, மலர், உணவு தானியங்கள் மொத்த விற்பனைக்கான அங்காடி வளாகம் 1996ல் திறக்கப்பட்டது.இந்த வளாகத்தில் திட கழிவுகள் அகற்றம் மிக பெரிய சவாலாக உள்ளது. அழுகும் பொருட்களால் ஏற்படும் கழிவுகள் இங்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவற்றை அப்புறப் படுத்த தனியார் நிறுவனங்களை சி.எம்.டி.ஏ., நிர்வாகம் அமர்த்தினாலும், முழுமையான துாய்மை என்ற நிலையை எட்ட முடியவில்லை.இந்நிலையில், இங்கு மொத்த விற்பனை அங்காடி வளாகங்கள், நடைபாதைகள், வாகனநிறுத்துமிடங்கள் ஆகியவற்றில் இருந்து, திடகழிவுகளை தினசரி சேகரிக்க புதிய நிறுவனம் தேர்வு செய்யப்படஉள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இங்கு சேகரிக்கப்படும் கழிவுகளை, சென்னை மாநகராட்சி யுடன் இணைந்துமுறையாக அப்புறப்படுத்தும் பணியைஅந்நிறுவனம்மேற்கொள்ளும்.இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.'ஓரிரு மாதங்களில் புதிய நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, கழிவுகளை அப்புறப்படுத்தும் பணி ஒப்படைக்கப்படும்' என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை