மேலும் செய்திகள்
வேலை வாய்ப்பு முகாமில் 75 பேருக்கு பணி ஆணை
17-Mar-2025
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலையில், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் 18வது தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் நேற்று நடந்தது.பல்கலை துணைவேந்தர் முனைவர் ஸ்ரீனிவாசு தலைமை வகித்தார். 'எச்பிஇ நெட்வொர்க்' நிறுவனத்தின் கணினிப் பொறியாளர் வேல்ராஜ் நெட்வொர்க் தொடர்பான கண்காட்சி துவக்கி வைத்து பேசினார்.'யுபிஎஸ் இந்தியா டெக்னாலஜி சென்டர்' சென்னை நிறுவனத்தின் துணை தலைவர் சுப்ரமணி ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.நுண்ணறிவு, மிஷின் லேர்னிங் மற்றும் ஹைப்கர்வ் தொழில்நுட்பம் மாற்றங்கள் குறித்து எடுத்துரைத்தார். இந்த கருத்தரங்கில் தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகள் நடந்தன.அறிவியல் மற்றும் கல்வித் துறை புல தலைவர் வெங்கட்ரமணன் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ- - மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார்.பல்கலை கணினி மற்றும் பொறியியல் துறை தலைவர் செந்தில்குமரன் வரவேற்றார். கணினி பேராசிரியை சரஸ்வதி நன்றி கூறினார்.
17-Mar-2025