மேலும் செய்திகள்
சங்கர் ஐ.ஏ.ஏஸ்., அகாடமி மாணவர்கள் சாதனை
12-Apr-2025
காஞ்சிபுரம்,காஞ்சிபுரம், ‛ட்ரிபிள் எஸ் ' கிரிக்கெட் அகாடமி சார்பில், 16 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான, 50 ஓவர் கிரிக்கெட் போட்டி காஞ்சிபுரம் வெள்ளைகேட்டில் உள்ள பல்லவன் பொறியியல் கல்லுாரியில் நேற்று துவங்கியது.இப்போட்டியில் அரக்கோணம், ஓசூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த ஆறு அணிகள் பங்கேற்கின்றன. வரும் மே மாதம் 2ம் தேதி வரை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.முதல் நாளான நேற்று, அரக்கோணம் சாய்ஸ்ரீ கிரிக்கெட் அகாடமியும், சென்னை சூப்பர் சுனில் கிரிக்கெட் அகாடமி அணியினரும் மோதினர்.கிரிக்கெட் போட்டியின் துவக்க விழாவான நேற்று, ‛ட்ரிபிள் எஸ்‛ கிரிக்கெட அகாடமி பயிற்சியாளர்கள், கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
12-Apr-2025