உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஊராட்சி வளர்ச்சி திட்ட பயிற்சி கண் துடைப்பு

ஊராட்சி வளர்ச்சி திட்ட பயிற்சி கண் துடைப்பு

காஞ்சிபுரம், ஜூன். 20– ஊராட்சி வளர்ச்சி திட்டம் குறித்த பயிற்சி, வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் கண் துடைப்புக்கு மட்டுமே நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், 274 ஊராட்சிகள் உள்ளன. நடப்பாண்டிற்கான கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரிப்பு குறித்து, கடந்த இரண்டு நாட்களாக, ஊராட்சி தலைவர், செயலர் ஆகியோருக்கு அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பயிற்சிகள் நடத்த வேண்டும் அறிவுரை வழங்கப்பட்டு இருந்தது. இரு நாட்கள் நடந்த பயிற்சி கூட்டத்தில், வழக்கம் போல சம்பிரதாயத்திற்கு மட்டுமே சில ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் பங்கேற்றனர். பல ஊராட்சி தலைவர்கள், செயலர்கள் பங்கேற்கவில்லை. இதை சம்பந்தப்பட்ட துறையினர் முறைப்படுத்தி முறையாக ஊராட்சிகளுக்கு தேவையான திட்டமிடல் செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை