மேலும் செய்திகள்
புகைப்பட கண்காட்சி
07-Mar-2025
உத்திரமேரூர்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் கிராமத்தில், தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்பட தொகுப்புகள் பொதுமக்களின் பார்வைக்காக நேற்று காட்சிப்படுத்தப்பட்டது.அதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள், அமைச்சர், கலெக்டர், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்ற நிகழ்வுகளின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்பட தொகுப்பினை பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பார்வையிட்டு சென்றனர்.
07-Mar-2025