உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குரூப் - 2 தேர்வுக்கு 8ம் தேதி முதல் பயிற்சி

குரூப் - 2 தேர்வுக்கு 8ம் தேதி முதல் பயிற்சி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.தற்போது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், 'குரூப் - 2' பணிக்கான 507 பணியிடங்களும், குரூப் 2ஏ பதவிகளுக்கான 1,820 பணியிடங்கள் அடங்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தேர்வுக்கு தயாராகும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வர்கள், காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் இலவசபயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் ஜூலை 8 முதல் துவங்கி நடைபெற உள்ளது.பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்களது போட்டோ, ஆதார் அட்டை உள்ளிட்ட விபரங்களுடன், வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ