மேலும் செய்திகள்
பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு உதவி மையம்
08-Mar-2025
காஞ்சிபுரம்:டாக்டர் கலாம் வழியில் உதவும் கரங்கள், காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் பெண் மருத்துவர்கள் பிரிவு சார்பில், காஞ்சிபுரம் டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், நடப்பு ஆண்டு பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி, காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் ரவி தலைமையில் நேற்று நடந்து.இதில், மீனாட்சி மருத்துவ கல்லுாரி மனநலத்துறை பேராசிரியர் டாக்டர் அர்த்தநாரி, இந்திய பெண்கள் மருத்துவப் பிரிவு செயலர் காஞ்சனா ஆகியோர், முதல் முறையாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பயத்தை போக்கும் வகையிலும், பாடங்களை எவ்வாறு மனப்பாடம் செய்யும் வகையில் படிக்க வேண்டும் என்றனர்.மேலும்,, தேர்வு அறையில் பதற்றம் இல்லாமல் எவ்வாறு தேர்வு எழுத வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு உளவியல் ஆலோசனைகளை வழங்கினர். தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம் நன்றி கூறினார்.
08-Mar-2025