பதிவேடு புத்தகத்தில் பல்லுயிர்களின் விபரங்கள் பதிவு
காஞ்சிபுரம்: ஊராட்சி அளவிலான, பல்வகை மேலாண் குழு கூட்டம் நேற்று, தேவரியம்பாக்கம் ஊராட்சியில் நடந்தது.இந்த கூட்டத்திற்கு, ஊராட்சி அளவிலான பல்வகை மேலாண் குழு தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார்.தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமார் முன்னிலை வகித்தார்.அடி தள ஆட்சியல் நிறுவன செயலர் பிரபாகரன், ஊரக வளர்ச்சி பயிற்றுனர் கோகுல் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில், பல்லுயிர்களின் விபரங்கள், பதிவேட்டு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. மேலும், பல்வகை மேலாண் குழு உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.