உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திறந்தவெளி கிணறால் விபத்து அபாயம்

திறந்தவெளி கிணறால் விபத்து அபாயம்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- மணிமங்கலம் சாலையில், மலைப்பட்டில் இருந்து மாங்காணியம் செல்லும் சாலை பிரிந்து செல்கிறது. இந்த சாலை வழியே, மாகாணியம், அழகூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்றுவருகின்றன.இந்த நிலையில், இந்த சாலையோரம் தனியாருக்கு செந்தமான இடத்தில், தடுப்பு சுவர் இல்லாத கிணறு உள்ளது. இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்தால், கிணற்றில் விழுந்து உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.மேலும், ஆடு, மாடுகள் இந்த கிணற்றோரம் உள்ள புற்களை மேய்வதற்கு சுற்றி திரிகின்றன. அப்போது, தவறி விழ நேரிடும்.மது பிரியர்கள் அந்த கிணற்று திட்டில் அமர்ந்து மது குடிக்கினறனர். விபத்து ஏற்படும் முன், கிணற்றுக்கு உடனடியாக தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என,அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ