உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சங்கரா செவிலியர் மகளிர் கல்லுாரி நல்லுாரில் வரும் 15ல் திறப்பு

சங்கரா செவிலியர் மகளிர் கல்லுாரி நல்லுாரில் வரும் 15ல் திறப்பு

காஞ்சிபுரம்:காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுடன், ஸ்ரீசங்கர கிருபா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை சார்பில், காஞ்சிபுரம் அடுத்த, நல்லுாரில் 53 கோடி ரூபாய் செலவில், 1 லட்சத்து 6,040 சதுர அடி பரப்பில் விடுதி வசதியுடன் சங்கரா செவிலியர் மகளிர் கல்லுாரி கட்டப்பட்டு உள்ளது.பெண்களுக்கென பிரத்யேகமாக கட்டப்பட்டுள்ள இக்கல்லுாரியில் அனைத்து வகையான வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.இக்கல்லுாரி திறப்பு விழா நாளை மறுதினம் நடைபெறுகிறது. இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்.கவுரவ விருந்தினர்களாக டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன், டி.சி.எஸ்.,. நிர்வாக இயக்குனர் கே. கிருத்திவாசன் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை