மேலும் செய்திகள்
புதர் மண்டி கிடக்கும் பள்ளம்பாக்கம் சுடுகாடு
04-Aug-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, பரந்துார் கிராம கூட்டு சாலை முதல், வளத்துார் கிராமம் வழியாக, புரிசை கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இச்சாலையில், 12 இடங்களில் அபாயகரமான வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளில் ஓரத்தில், ஆளுயரத்திற்கு சீமைக்கருவேல மரங்கள் புதர் மண்டிக் கிடக்கின்றன.குறிப்பாக, காஞ்சிபுரம், காரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, பரந்துார், வளத்துார், புரிசை வழியாக தக்கோலம் செல்வோர் வாகன விபத்தில் சிக்க நேரிடும் அபாயம் உள்ளது.மேலும், இந்த சாலையில் போதிய மின் விளக்கு வசதிகள் இல்லாததால், சைக்கிளில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, பரந்துார் - வளத்துார் - புரிசை இடையே வாகன வளைவுகள் ஓரம் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
04-Aug-2024