உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திறன் வளர்ப்பு பயிற்சி

திறன் வளர்ப்பு பயிற்சி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையத்தில், கூட்டுறவு சங்க அலுவலர்களுக்கு, ஆளுமை திறன் பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த பயிற்சி முகாமில், காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ தலைமை வகித்தார்.பணியாளர்கள் இடையே தொடர்பு ஏற்படுத்துதல், குழு மனப்பான்மை வளர்த்தல், உணர்வு திறன் மேலாண் வளர்த்தல், மன அழுத்தம் போக்குவது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ பேசினார்.இதில், துணைப் பதிவாளர்கள், செயலாட்சியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை