உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோவில் புனரமைப்பு பணி ரூ.2.10 கோடியில் துவக்கம்

கோவில் புனரமைப்பு பணி ரூ.2.10 கோடியில் துவக்கம்

மாங்காடு, மாங்காடு காமாட்சி அம்மன் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலின் உபகோவிலாக, வெள்ளீஸ்வரர், வேம்புலி மாரியம்மன், சுங்கு விநாயகர் கோவில்கள் உள்ளன. இதில், வெள்ளீஸ்வரர் கோவிலுக்கு, புதிய மரத்தேர் அமைக்க, 60 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. சிதிலமடைந்துள்ள வேம்புலி மாரியம்மன் கோவில், 1.50 கோடி ரூபாய் மதிப்பிலும், சுங்குவிநாயகர் கோவில், 60 லட்சம் ரூபாய் மதிப்பிலும் புனரமைக்க திட்டமிடப்பட்டது.இதை தொடர்ந்து, இரண்டு கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு, பாலாலயம் கும்பாபிஷேகம் செய்து, நேற்று பணிகள் துவக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை