உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வலி நிவாரண மாத்திரை சாப்பிட்ட சிறுவன் பலி?

வலி நிவாரண மாத்திரை சாப்பிட்ட சிறுவன் பலி?

சென்னை : கொளத்துார், திருமலை நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் உமர் பாரூக். நேற்று முன்தினம் இவரதுவீட்டிற்கு, திரிபுராமாநிலத்தைச் சேர்ந்தஉறவினர் சதாம் உசேன், 17,என்பவர் வந்துள்ளார். அவருக்கு திடீரென பல் வலி ஏற்பட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் வலி நிவாரண மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். இதில், சதாம் உசேனின் உதடு மற்றும் கண் வீங்கியதாக கூறப் படுகிறது.உமர் பரூக், அவரை கொளத்துார், கடப்பா சாலையில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.அங்கு சிகிச்சை பெற்று வந்த சதாம் உசேன்,திடீரென வலிப்பு ஏற்பட்டு நேற்று முன்தினம்உயிரிழந்தார்.ராஜமங்கலம் போலீசார், அவரது உடலை மீட்டுவிசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை