உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / முதல்வர் கோப்பை பதிவு செய்ய அவகாசம்

முதல்வர் கோப்பை பதிவு செய்ய அவகாசம்

சென்னை:முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவு செய்ய செப்., 2ம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.முதல்வர் கோப்பை -2024 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக https://sdat.tn.gov.inஎன்ற இணையதளத்தில், கடந்த 4ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. பதிவு செய்ய இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று, முன்பதிவு செய்ய, செப்., 2ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.எனவே, மாணவர்கள் தாங்களாகவோ அல்லது தங்கள் பள்ளி, கல்லூரி வாயிலாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். போட்டித் தொடர்பான விவரங்களுக்கு 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை