உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வரைவு வழிகாட்டி பதிவேடு வெளியீடு ஆட்சேபனை தெரிவிக்க அவகாசம்

வரைவு வழிகாட்டி பதிவேடு வெளியீடு ஆட்சேபனை தெரிவிக்க அவகாசம்

காஞ்சிபுரம்,:பதிவுத்துறையில், சொத்துகளுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி தயாரிக்க மதிப்பீடு செய்தல், வெளியிடுதல், திருத்தியமைத்தல் போன்ற, தமிழ்நாடு பதிவுத்துறையின், முத்திரை விதிகளின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது.இவை, பொதுமக்கள் பார்வையிடும் வகையில், தாசில்தார் அலுவலகங்கள், சார் - பதிவாளர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன.மேலும், இதன் விபரங்கள் www.tnreginet.gov.in என்ற இணையதள முகவரியில் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த வரைவு வழிகாட்டி பதிவேடு பற்றி ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்கள் இருந்தால், 15 நாட்களுக்குள், மாவட்ட கலெக்டரின் தலைமையிலான மதிப்பீட்டு துணை குழுவிடம், நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தெரியப்படுத்தலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி