உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரயிலில் அடிபட்டு இருவர் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு இருவர் உயிரிழப்பு

தாம்பரம், திருச்சியைச் சேர்ந்தவர் ஜெயசிவா, 21. பெருங்களத்துார், ஏரிக்கரையை ஒட்டியுள்ள பகுதியில் தங்கி, இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் கார் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து, பெருங்களத்துாருக்கு வந்த அவர், அறைக்கு செல்வதற்காக ஏரிக்கரை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, ரயிலில் அடிபட்டு இறந்தார்.நேற்று காலை, அவ்வழியாக சென்றவர்கள், அவர் இறந்து கிடந்ததை பார்த்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.மற்றொரு சம்பவம்தாம்பரம் - பெருங்களத்துார் இடையே, நேற்று முன்தினம் மாலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், விரைவு ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் உடலை கைப்பற்றி, மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர் குறித்த வேறு எந்த விபரமும் தெரியவில்லை.இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து, தாம்பரம் ரயில்வே போலீசார்விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை