மேலும் செய்திகள்
மண் அரிப்பால் பள்ளமான சாலை
08-Aug-2024
காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம், ஆனைகட்டி தெரு வழியாக, வரதராஜ பெருமாள் கோவில், சதாவரம், பெரியார் நகர், தேனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிக்கு வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இத்தெருவில், மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை சேதமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சேதமடைந்த பகுதியில் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, ஆனைகட்டி தெருவில், சேதமடைந்த சாலையை 'பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.
08-Aug-2024