உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ராஜகுளத்தில் நாளை வரதர் தெப்பல் உத்சவம்

ராஜகுளத்தில் நாளை வரதர் தெப்பல் உத்சவம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ராஜகுளம் கிராமத்தில், மாசி மாத பவுர்ணமி தினத்தன்று, வரதராஜப் பெருமாள் தெப்பல் உத்சவத்திற்கு புறப்பாடு நடக்கும்.நடப்பாண்டு, மாசி பவுர்ணமியை முன்னிட்டு நாளை, அதிகாலை 4:00 மணிக்கு காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் புறப்பட்டு, வையாவூர், கவுரியம்மன் பேட்டை, சிட்டியம்பாக்கம் ஆகிய கிராமங்களுக்கு சென்ற பின், ராஜகுளம் கிராமத்தை சென்றடைவார்.அங்குள்ள உத்சவ மண்டபத்தில், பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். அதை தொடர்ந்து, மாலை, 6:00 மணி அளவில் வரதராஜப் பெருமாள் ராஜகுளம் தெப்பலில் எழுந்தருளி, குளத்தை மூன்று முறை வலம் வருவார்.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை, சிட்டியம்பாக்கம் கிராமத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை