மேலும் செய்திகள்
குப்பை கொட்டும் இடமான கல்லுகுளக்கரை
20-Aug-2024
அம்மன் கோவில் குளம் சீரமைக்கப்படுமா?
27-Aug-2024
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், புளியம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே ரயில்வே கேட் அடுத்து கிராமத்திற்கு சொந்தமான பொதுக்குளம் உள்ளது. அப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள இக்குளத்தை, குளித்தல் மற்றும் துணி துவைத்தல் போன்றவைக்கு அப்பகுதியினர் பயன்படுத்தி வந்தனர்.மேலும், கால்நடைகளின் நீர் ஆதாரமாகவும் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது இக்குளம் முறையான பராமரிப்பின்மையால், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பாசி படர்ந்து காணப்படுகின்றன.சாலையோரம் உள்ள இந்த குளத்து நீரை, கடந்த ஆண்டுகளில் பாதசாரிகள் பலரும் குடிநீராக பயன்படுத்தியதாகவும், தற்போது உபயோகமற்று உள்ளதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.எனவே, இக்குளத்தின் பாசியை அகற்றி, சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புளியம்பாக்கம் கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
20-Aug-2024
27-Aug-2024