மேலும் செய்திகள்
ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் அமைக்க கோரிக்கை
17-Feb-2025
ஏனாத்துார், வாலாஜாபாத் ஒன்றியம் ஏனாத்துாரில், 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்தில் கவுரியம்மன்பேட்டை, சமத்துவபுரம், பள்ள காலனி, கட்டவாக்கம் காலனி, ஏனாத்துார் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், துணை சுகாதார நிலைய கட்டடம் பழுதடைந்ததால், அருகில் உள்ள கிராம சேவை மைய கட்டடத்திற்கு துணை சுகாதார நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டது.கிராம சேவை மையத்தில், போதுமான இடவசதியின்றி குறுகிய இடத்தில் துணை சுகாதார நிலையம் செயல்படுகிறது. அங்கு, கர்ப்பிணியர் மட்டுமின்றி, பிற சிகிச்சைக்காக மருத்துவ பரிசோதனை செய்ய வருவோர், போதிய வசதி இன்றி சிரமப்படுகின்றனர்.எனவே, ஏனாத்துாரில் பழுதடைந்த நிலையில் உள்ள துணை சுகாதார நிலையத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
17-Feb-2025