மேலும் செய்திகள்
வளத்தாஞ்சேரி சாலையில் தடுப்பு இல்லாத வளைவு
11-Sep-2024
ஸ்ரீபெரும்புதுார், செப். 15-படப்பை அடுத்த, சாலமங்கலத்தில் இருந்து மாகாணியம் செல்லும் பிரதான சாலை வழியே, நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ - மாணவியர், படப்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.இந்த நிலையில், மாகாணியம் வனப்பகுதியின் மத்தியில் செல்லும் இந்த சாலையில் உள்ள சிறுபாலத்தின் தடுப்பு சுவர் உடைந்து உள்ளது. இதனால், இவ்வழியா செல்லும் வாகன ஓட்டிகள் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்குகின்றனர்.குறிப்பாக, இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும் போது, தடுப்பு சுவர் உடைந்த சிறுபாலத்தில் விழுந்து காயமடைகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள், மாகாணியம் சாலையில் உள்ள சிறு பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11-Sep-2024