உத்திரமேரூர் - தி.மலைக்கு நேரடி பேருந்து இயக்கப்படுமா?
கிளாம்பாக்கத்தில் இருந்து, புக்கத்துறை, உத்திரமேரூர் வழியாக வந்தவாசி வரையில் தடம்- எண்:104 என்ற அரசு பேருந்து மற்றும் கிளாம்பாக்கத்தில் இருந்து, புக்கத்துறை, உத்திரமேரூர், வந்தவாசி, சேத்பட் வழியாக போளூருக்கு தடம் எண்-:148 ஆகிய அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.உத்திரமேரூரில் இருந்து, வந்தவாசி, சேத்பட் வழியாக திருவண்ணாமலைக்கு செல்வோர், அமர இருக்கை இன்றி மிகுந்த சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது.ஆகையால், உத்திரமேரூரில் இருந்து, திருவண்ணாமலை செல்ல நேரடியாக அரசு பேருந்து வசதிகள் மற்றும் பௌர்ணமி நாட்களில் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.- -டி. அறிவழகன்,திருப்புலிவனம்.