உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாம்பு கடித்து தொழிலாளி பலி

பாம்பு கடித்து தொழிலாளி பலி

மாகரல்:காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூர் கிராமம், புதுநகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 38. இவர், காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை கிராமத்தில், சொந்தமாக வெல்டிங் கடை நடத்தி வந்தார்.மணிகண்டன் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, தன் வீட்டின் பின்புறத்தில் இருந்த மரக்கட்டைகள் எடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது விஷப்பாம்பு கடித்ததை கண்டு வலியால் துடித்தார்.உறவினர்கள் அவரை கீழ்பேரமநல்லுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்குஅழைத்து சென்றனர். அங்கு மணிகண்டனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிர் இழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து, மாகரல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ