குண்டாசில் வாலிபர் கைது
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லவன் நகரில் உள்ள விவேகானந்தா தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீசன், 29. இவர், கஞ்சா விற்பனை வழக்கில், கடந்த அக்., மாதம் 18ம் தேதி, காஞ்சி தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டு, வேலுார் மத்திய சிறையில் உள்ளார்.இவர் மீது, போதை பொருள் மற்றும் பிற வகையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட போலீஸ் எஸ்.பி., சண்முகம் பரிந்துரை செய்தார்.அவரது பரிந்துரை பேரில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டார். குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான நகலை, சிறையில் உள்ள ஜெகதீசனிடம் போலீசார் வழங்கினர்.