உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குளத்தில் மூழ்கிய வாலிபர் பலி

குளத்தில் மூழ்கிய வாலிபர் பலி

காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அன்வர், 26, மொபைல்போன் பழுது நீக்கும் பணி செய்து வந்தார்.நேற்று முன் தினம் இரவு, வீட்டில் குடும்பத்தினருடன் தகராறு செய்து விட்டு, 'டிவிஎஸ் ஜூபிடர்' வாகனத்தில் சென்று விட்டார். நேற்று காலை, சிவகாஞ்சி காவல் நிலையத்தில் மகன் காணவில்லை என, அன்வர் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.அப்போது, சர்வதீர்த்தகரையில் கேட்பாற்று கிடந்த இருசக்கர வாகனத்தை பார்த்து, போலீசார் காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து, குளத்தில் தேடி உள்ளனர். அன்வர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அன்வரின் உடலை, பிரேத பரிசோதனைக்கு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, சிவ காஞ்சி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !