மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து ஊழியர்கள் படுகாயம்
12-Jan-2025
காஞ்சிபுரம், சென்னை கோயம்பேடில் இருந்து, 30க்கும் மேற்பட்ட பயணியருடன், காஞ்சிபுரத்தை நோக்கி அரசு பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. ஸ்ரீபெரும்புதுார் அடுத்த பென்னலுார் அருகே, சாலையை கடக்க நின்றிருந்த லாரி மீது பேருந்து மோதியது. இதில், அரசு பேருந்து முன்பகுதி சேதமடைந்தது. மேலும், பேருந்தில் பயணம் செய்த ஆறு பெண்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வழக்கு பதிந்த ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
12-Jan-2025