உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தலைமை பண்பு பயிற்சிக்கு 2 ஊராட்சி தலைவர்கள் தேர்வு

தலைமை பண்பு பயிற்சிக்கு 2 ஊராட்சி தலைவர்கள் தேர்வு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஐந்து வட்டார வளர்ச்சி அலுவலங்களின் கட்டுப்பாட்டில், 274 ஊராட்சிகள் உள்ளன.இந்த ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த பல நிலை அலுவலர்களுக்கு துறை சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அந்த வரிசையில், ஊராட்சி தலைவர்களுக்கு தலைமை பண்பு வளர்க்கும் விதமாக ஜார்கண்ட் மாநில தொழில் நுட்ப பயிற்சி வளாகத்தில் ஒரு வார பயிற்சி அளிக்கப்பட உள்ளன.இந்த பயிற்சிக்கு, தமிழகத்தில் இருந்து ஐந்து ஊராட்சி தலைவர்கள், இரண்டு ஒன்றிய கவுன்சிலர்கள், மூன்று உதவி இயக்குனர் அந்தஸ்தில் ஊரக வளர்ச்சி துறையினர் என மொத்தம் பத்து நபர்கள் பங்கேற்க உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாலாஜாபாத் ஒன்றியத்தில் தேவரியம்பாக்கம் மற்றும் உத்திரமேரூர் ஒன்றியம் விசூர் ஆகிய இரு ஊராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாளை ஜார்கண்ட் மாநிலத்திற்கு செல்கின்றனர். ஏப்.,7 ம் தேதி முதல் பயற்சி துவங்கி ஏப்.,11ம் தேதி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !