உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வழிப்பறி ஈடுபட்ட 2 பேர் கைது

வழிப்பறி ஈடுபட்ட 2 பேர் கைது

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் செங்கழுநீரோடை தெருவைச் சேர்ந்த சிவகுமார், 57, திரையரங்கு ஊழியர். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்துவிட்டு, சைக்கிளில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார். காஞ்சிபுரம் நகர கூட்டுறவு வங்கி அருகே செல்லும் போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், சிவகுமாரின் மொபைல் போனை பறித்து சென்றனர்.அவர், சிவ காஞ்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, தாயார்குளம் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார், 25 மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய இருவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை