உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / போக்சோ வழக்கில் அடைக்கலம் தந்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் அடைக்கலம் தந்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, தேனம்பாக்கத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனும், அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியும், 2020 ஜூலையில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர்.இருவருக்கும், கருக்குப்பேட்டையில் உள்ள, ராஜா, 22, என்பவர், தன் வீட்டில் இரு நாட்கள் அடைக்கலம் தந்துள்ளார்.தந்தை போலீசில் அளித்த புகாரில், மகள் மாயம் என போலீசார் வழக்கு பதிந்தனர். சிறுவனும், சிறுமியும் திருமணம் செய்து கொண்டு, கருக்குப்பேட்டையில் இரு நாட்கள் தங்கியிருந்ததால், போக்சோ வழக்காக போலீசார் மாற்றினர்.இந்த வழக்கின் விசாரணை, இளைஞர் நீதி குழுமத்தில் நடந்து வருகிறது. சிறுவன், சிறுமி தங்க அடைக்கலம் கொடுத்த ராஜா, 22, மீதான விசாரணை, காஞ்சிபுரம் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி செம்மல், இவ்வழக்கில் ராஜா குற்றவாளி என அறிவித்தார். சிறுவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.இரு பிரிவுகளுக்கான சிறை தண்டனைகளையும், ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை