உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 9 சிறுவர் உட்பட 33 பேருக்கு வயிற்றுப்போக்கு காஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை

9 சிறுவர் உட்பட 33 பேருக்கு வயிற்றுப்போக்கு காஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளான பல்லவர்மேடு, பிள்ளையார்பாளையம், நேதாஜி நகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், இரு நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.நேற்று முன்தினம் இரவு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், 42 பேர் வயிற்றுப்போக்கு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இதில், 14 பேர் சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினர். இதையடுத்து, 28 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.இந்நிலையில், நேற்று புதிதாக 5 பேர் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இதையடுத்து அரசு மருத்துவமனையில் 9 சிறுவர் - சிறுமியர் உட்பட 33 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் த.ரா. செந்தில் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு, காஞ்சிபுரம் மட்டுமின்றி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்களும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். சளி, இருமல், காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவது போல, வயிற்றுப்போக்குக்கும் சிகிச்சை பெற வருகின்றனர்.கெட்டுப்போன உணவு, மாம்பழம், முதல் நாள் சமைத்த உணவை மறுநாள் சூடுபடுத்தி சாப்பிடுவது, ஈ மொய்த்த தின்பண்டத்தை உண்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துமவனைக்கு தினமும் 5 - 10 பேர் வரை சிகிச்சைக்கு வருவது வழக்கமான ஒன்றுதான்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கோ அல்லது ஒரே தெரு, அல்லது ஒரே பகுதியைச் சேர்ந்தவர்களுக்கோ வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், சுகாதாரத் துறை சார்பில், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ