உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஏரி பாசன சங்க தேர்தல் 40 பேர் மனு தாக்கல்

ஏரி பாசன சங்க தேர்தல் 40 பேர் மனு தாக்கல்

உத்திரமேரூர்; உத்திரமேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட, அண்ணாத்துார், அனுமந்தண்டலம், அரும்புலியூர், கிளக்காடி, குறும்பரை, மலையாங்குளம், பேரணக்காவூர், புல்லம்பாக்கம்.சாலவாக்கம், சிறுபினாயூர், திருப்புலிவனம், விச்சூர் ஆகிய 12 ஏரிகளுக்கான, ஏரி நீர்ப்பாசன சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல், வரும் மார்ச் 27ல் நடக்க உள்ளது.இதற்காக, உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தில், வேட்பாளர்களிடம் இருந்து, 40 வேட்பு மனுக்கள் நேற்று பெறப்பட்டன.தொடர்ந்து, இன்று மற்றும் நாளை, தகுதியுள்ள மனுக்கள் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பட உள்ளது. பின், வரும் மார்ச் 27ல் அந்தந்த கிராமங்களில் ஓட்டு எண்ணிக்கை நடந்து, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ