மேலும் செய்திகள்
நம்பிக்கை கரைகிறது!
17-Sep-2024
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலெக்டர் கலைச் செல்வி தலைமையில் கடந்த மே மாதம் நடத்த வேண்டிய ஜமாபந்தி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக, ஜூன் மாதம் 15ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை நடந்தது.இந்த முகாமில், வீட்டு மனை பட்டா வழங்குவது, நிலத்தை அளப்பது, பட்டா திருத்தம், உட்பிரிவு செய்வது, நில உடமை மேம்பாட்டு திட்டத்தில் வழங்கப்பட்ட பட்டாவில் திருத்தம் செய்வது என, பல வகையான கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்திருந்தனர்.மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாவிலும், 5,249 பேர் ஜமாபந்தி முகாமில் மனு அளித்திருந்தனர். இவற்றில், கடந்த செப்டம்பர் மாத கணக்கெடுப்பின்படி, 3,897 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.மீதமுள்ள 1,278 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 74 மனுக்கள் மட்டும் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.
17-Sep-2024